வடக்கில் பாகிஸ்தான் பிரஜைகளின் பிரசன்னம் : இந்தியா விசனம்
வடக்கு மாகாணங்களில் பாகிஸ்தான் பிரஜைகளின் பிரசன்னம் சமீபத்தில் அதிகரித்து வருவது தொடர்பில் தென்னிந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மன்னாரில் உள்ளூர் காற்றாலை மின் தனியார் நிறுவனம் காற்றாலை அமைப்பதற்காக 28 பாகிஸ்தானியர்களை அழைத்து வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் பாரிய காற்றாலைகளை நிர்மாணிப்பதற்காக ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளை உள்ளீர்க்க முயற்சிக்கும் தாவூத் இப்ராஹிம்.. அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்!
காற்றாலை அமைப்பதற்காக பாகிஸ்தானியர்கள்
பாகிஸ்தான் பிரஜைகள் இரும்பு தொழிலில் கைத்தேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்த தொழில்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

சமீபத்தில், மன்னாரில் மேலும் முன்மொழியப்பட்ட காற்றாலை திட்டங்களை அப்பகுதி மக்களின் ஒப்புதல் இல்லாமல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யாமல் செயல்படுத்த வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
மன்னார் படுகை பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுக்கான பொதுவான வழியாகப் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் அதிகரித்த பாகிஸ்தான் பிரஜைகளின் பிரசன்னம் பெரும் அச்சுறுத்தலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |