முன்னாள் முக்கிய அமைச்சர் மருத்துவமனையில்! நீதிமன்றம் விதித்த உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் உடல்நிலை குறித்து சிரேஸ்ட சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்தார்.
2016ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளை புனைந்த குற்றச்சாட்டு, பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட்ட மூவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க மன்றில் முன்னிலையாகவில்லை.
உடல்நிலை சீரின்மையால் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்தே அவரின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 13 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri