சிங்கள நடிகை தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, மார்ச் 21 ஆம் திகதியன்று மன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி, மனு ஒன்றின் மூலம் விடுத்த கோரிக்கை தொடர்பில், இதன்போது, உண்மைகளை முன்வைக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றின் உத்தரவு
சட்டவிரோத வழிகளில் சொத்துக்களை ஈட்டியதாகக் கூறப்படும் விசாரணையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்பட்டுள்ள ஹன்சமாலி, பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகள் காரணமாக தனது வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தமது வணிகத்திலிருந்து அழகுசாதனப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களிடம், பொலிஸார் விசாரித்து வருவதாகவும், இது தமது உரிமைகளை மீறுவதாகவும், ஹன்சமாலி தமது மனுவில் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில், ஹன்சமாலியின் சட்ட சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று குற்றப்புலனாய்வு துறையினருக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
