மத்தள விமான நிலையம் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை(Mattala Rajapaksa International Airport) விமான பராமரிப்பு மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பாதீடு மீதான குழு நிலை விவாதத்தின் போது பேசிய அமைச்சர், குறித்த விமான நிலையத்தை லாபகரமான முயற்சியாக மாற்றுவதற்கு பொருத்தமான வெளிநாட்டு முதலீட்டை அரசாங்கம் விரும்புவதாகக் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு
இந்த விமான நிலையம் 36.5 பில்லியன் ருபாய் செலவில் கட்டப்பட்டது, அதேநேரம் கடந்த ஐந்து ஆண்டுகளில்,. 38.5 பில்லியன் ரூபாய் மொத்த இழப்பைச் சந்தித்துள்ளது.
இந்தநிலையில், அரசாங்கம், விமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக, மத்தள விமான நிலையத்தின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்த முயற்சிக்கிறது.
இது உலகளாவிய விமான நிறுவனங்களை ஈர்க்கும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |