கொட்டதெனியாவ சிறுவர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
43 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயிருந்த கொடதெனியாவைச் சேர்ந்த இரு சிறுவர்களை மாகொல - மாசெவன சிறுவர் மத்திய நிலையத்தில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி காணாமல்போன இரண்டு சிறுவர்களும் கடந்த 6 ஆம் திகதி மீரிகமவில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளரால் அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களை மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து இரு சிறுவர்களையும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
