மட்டக்களப்பில் இரவு வேளையில் தடை உத்தரவை வழங்கும் பொலிஸார்
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் எங்கும் தயார் நிலையில் உள்ள சந்தர்ப்பத்தில் அதனை தடைசெய்யக்கோரி பல்வேறு பகுதிகளிலிலும் நீதிமன்ற கட்டளைகளை பொலிஸார் பெற்று தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்கும் வகையில், சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமாருக்கு பொலிஸாரினான் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - கிரானில் வசிக்கும் லவக்குமாரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் நேற்றிரவு 09.20 மணிக்கு இது குறித்த தடையுத்தரவை வழங்கியுள்ளனர்.
மனித உரிமை மீறல்
இந்நிலையில், இந்த செயற்பாடு இதுவொரு மனித உரிமை மீறல் எனவும், தான் பல அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் சூழலில் பொலிஸார் இவ்வாறு நடந்துகொள்வது அநாகரிகமான விடயம் எனவும் லவக்குமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், மாவீரர் நினைவேந்தலைத் தடுக்க பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புக்கள் தடைகளை ஏற்படுத்திவரும் நிலையில், இவர் உள்ளிட்ட 23 பேருக்கு வாழைச்சேனை நீதிமன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் 19 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவிலும் லவக்குமாரின் பெயர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.






நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
