வவுனியாவில் இருந்து கனடா செல்ல முயன்ற சந்தேகநபர்: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய உத்தரவு
கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா (Vavuniya) தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி மனுதாக்கல் செய்ததையடுத்தே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் சம்பவத்தின் பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்பி வைத்ததாகவும் பிணை வழங்கப்பட்ட பின்னர் அவரும் கனடாவிற்கு தப்பிச்செல்ல இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல்
அத்துடன், இன்னும் சில சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொடூரமான கொலை சம்பவம் பிரதேச மக்களை அச்சமுற செய்ததாக தெரிவித்த நீதிபதி, சந்தேகநபர்களை 30.01.2025 வரையான காலப்பகுதிக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam