மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்று இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது.
கோரிக்கைகளை பரிசீலித்த நீதவான்
இதன்போது சந்தேகநபர்களான யோசித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னகொட ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.