அச்சுவேலியில் வீடொன்றுக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்திய சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (Photos)
வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்கள் 20 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 24 சந்தேகநபர்களையும் இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது பெண்கள் 04 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் ஆண்கள் 20 பேரையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 28 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 6 பேரை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் 24 சந்தேகநபர்களையும் இன்றையதினம் (04.07.2023) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
முன்னதாக பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக கிராபிக் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் 28ஆம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்திருந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்ந பொலிஸார் அமைதியின்மையை கட்டுப்படுத்த வானைநோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படல்
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 24 சந்தேகநபர்கள் கைது செய்யபட்டிருந்தனர்.
இதற்கமைய 24 சந்தேகநபர்களையும் இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
இதன்போது பெண்கள் 04 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் ஆண்கள் 20 பேரையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.