டயானாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதற்காக பிடியானை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இன்று 10 மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விசா அனுமதி
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தை மீறி தவறான தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றதாகவும், செல்லுபடியாகும் விசா அனுமதி இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அவருக்கு எதிராக ஏழு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கடந்த 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டது.



