கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (19) இடம்பெற்ற விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
ரமித் ரம்புக்வெல்ல கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியில் இரண்டு வீடுகளை தலா 80 மில்லியன் மற்றும் 65 மில்லியனுக்கு கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் விசாரணை நடத்தி சொத்துக்களை உடைமையாக்க தடை உத்தரவு பிறப்பிக்குமாறு ஆணைக்குழு இன்று நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட சொத்துக்களுக்கு டிசம்பர் 19ஆம் திகதி வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
