நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகாமையில் நல்லூர் பிரதேச சபையினால் கொடடப்படும் திண்மக் கழிவுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் குப்பை சேமிக்கும் இடத்தில் மருத்துவ, இலத்திரனியல், இரசாயன, பொலித்தீன், பிளாஸ்டி உள்ளிட்ட கழிவுகளை தரம் பிரிக்காமல் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வந்துள்ளன.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசியும் நிலத்தடி நீரை சுத்தமாக குடிக்க முடியாமலும் நிம்மதியாக உறங்க முடியாமல் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
எனினும் இதுவரையிலும் காத்திரமான முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில் ஒரு வாரத்திற்கு முதல் அப்பகுதி திண்மக்கழிவுகள் அடையாளம் தெரியாதோரால் எரியூட்டபட்ட நிலையில் மாவட்ட செயலகத்தின் முன்பு ஊர் மக்கள் சமூக செயற்பாட்டாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அரச அதிபரிடம் மனு கையளிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை சட்டத்தரணி நவநீதனால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேற்படி பிரச்சனை ஒரு பொதுத் தொல்லையாகவும் சூழல் மாசடையக் கூடிய வகையில் காணப்படுகின்றமைதொடர்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
விசாரணையை யாழ்ப்பாணம் நீதவான் லெனின் குமார் முன்னெடுத்திருந்த நிலையில் குப்பைகள் கொட்டப்படக் கூடாது எனவும் அங்கிருக்கும் குப்பைகளை பிறிதொரு இடத்திற்கு அகற்றப்பட வேண்டும் என்றும் அதிரடி தடையுத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் கோவிலுக்கு அருகாமையில் குப்பை கொட்டப்படுகின்றது என்று கடந்த வாரம் (09) சமூக செயற்பாட்டாளர்களான லோ.கோகிலன், த.சித்தார்த்தன் , பி.வத்சாங்கன், சி.சிவசங்கர், வ.நவநீதன் ஆகியோரால் சட்டத்தரணி நவநீதன் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam