ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன!

Sri Lanka Tamil
By T.Thibaharan Jun 20, 2025 10:59 PM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

ஈழத் தமிழர்களுடைய வரலாறும், தொன்மை மிகு பண்பாடும், அவர்கள் வாழும் தாயக நிலப்பரப்பின் கேந்திர அமைவிடமும் தோற்கடிக்கப்பட முடியாத பலமான இருப்பியலை கொண்டுள்ளது.

ஆயினும் ஈழத் தமிழர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றனர். ஈழத் தமிழர்களின் பிரச்சனை என்பது இலங்கை தீவுக்குள்ளோ, இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு உள்ளோயோ, அல்லது சிங்கள தலைவருடன் பேரம் பேசியோ தீர்க்கப்பட முடியாது.

இலங்கை தீவின் தேசிய இனப்பிரச்சனை என்பது இந்திய உபகண்டம் சார்ந்த பிரச்சனையாகவும், இந்தோ-பசுபிக் பிராந்தியம் சார்ந்த பிரச்சனையாகவும், சர்வதேசங்கள் தொடர்புபட்ட பிரச்சனையாகவும், உலகம் தழுவிய ஆளுகை போட்டியின் கேந்திர ஸ்தானத்தில் செல்வாக்கு செலுத்தும் பிரச்சனையாகவும் இருப்பதனால் சர்வதேச நாடுகளின் தலையிடுகளுக்கு கூடாகவே தீர்க்கப்படக் கூடியது ஒன்று.

அவ்வாறில்லாமல் இப்பிரச்சனை ஒருபோதும் யாராலும் தீர்க்கப்பட முடியாதது. அப்படியானால் ஈழத் தமிழர்கள் தங்களுடைய தேசிய அபிலாசைகளை அடைவதற்கு இனி என்ன செய்ய வேண்டும்? அதை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? அது எவ்வாறு ஆரம்பிக்கப்பட வேண்டும்? என்பது இங்கே முக்கியமானது.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்

கேள்விக்கான திறவுகோல் 

இந்த அடிப்படைக் கேள்விக்கான திறவுகோலை தேடியே இந்தப் பத்தி பயணிக்கிறது. ஈழத் தமிழர்கள் தமது விடுதலைக்கான பயணத்தில் ஒரு அரை அரசை கட்டி அதற்கான அணைத்து அரச கட்டுமானங்களையும் நிர்மாணம் செய்த நிலையில் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பெருந்தோல்வி அனைத்து அரசகட்டுமானங்களையும் சிதைத்தது மாத்திரம் அல்ல தமிழ் தேசிய சிந்தனைக்கும், தமிழ் தேசிய கருத்தியல் மண்டலத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கிவிட்டது.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! | What Should The Eelam Tamils Do Now

தமிழ் தேசிய இனத்தின் தேசியம் சார்ந்த கருத்தியல் மண்டலம் எதிரிகளால் மட்டுமல்ல உள்ளக முரண்களினால் தமிழினத்தின் வேடதார அரசியல்வாதிகளினாலும் சிதைக்கப்பட்டுள்ளது என்று சொல்வதே பொருந்தும்.

இத்தகைய எம்முன்னே மலையாகக் குவிந்து கிடக்கும் தோல்விகளில் இருந்து மீள்வதற்கும், இத்த தோல்விகளை வெற்றிக்கான படிக்கட்களாக மாற்றியமைத்து விடுதலைக்கான திசையில் முன்னோக்கி நகர்ந்து செல்வதற்கும் ஏற்ற புதிய பாதை ஒன்றை நாம் திறக்க வேண்டும்.

அதற்கு தமிழ் மக்களிடம் புதிய சிந்தனை மனப்பாங்கு மையம் கொள்ளவேண்டும். அந்த சிந்தனை முற்றிலும் அறிவார்ந்த பாதையில் கடந்த கால தோல்விகளுக்கான காரணங்களை தத்துவ ரீதியில் கண்டறியத்தக்கான தகமையைக் கொண்டிருக்க வேண்டும்.

கடந்தகால கற்பனைகளும், வீர தீர செயல்களும் இப்போது விதந்து பேசுவதற்குரிய நேரம் அல்ல. தூய இலட்சிய வாதங்களையும், இலக்கியக் கதாநாயகர் பாத்திர கற்பனாவாத சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

முற்றிலும் அரசறிவியல் சிந்தனையோடு தமிழ் மக்களின் நலன் ஒன்றையே இலக்காகக் கொண்ட ஒரு புதிய சிந்தனை போக்கிற்கு செல்வதன் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டக்கூடிய கருத்து மண்டலத்தை தோற்றுவிக்க முடியும்.

இஸ்ரேல்–ஈரான் போரின் பாதிப்புகளை முற்றிலும் தவிர்க்க முடியாது –பிமல் ரத்நாயக்க

இஸ்ரேல்–ஈரான் போரின் பாதிப்புகளை முற்றிலும் தவிர்க்க முடியாது –பிமல் ரத்நாயக்க

மனவிரக்தி, சிந்தனை வறுமை

ஈழத் தமிழ் சமூகத்தின் மத்தியில் கடந்த கால தோல்விகளினால் ஏற்பட்ட மனவிரக்தி, சிந்தனை வறுமை, போட்டி, பொறாமை, உள்ளக முரண்களை முற்றாக அகற்றி விடுதலைக்கான பாதையில் நம்பிக்கை ஊட்டுவதற்கு இன்றைய கால நடைமுறைக்கும், யதார்த்தத்திற்கும் உலகளாவிய, மற்றும் சர்வதேச, பிராந்திய அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் புதிய அரசியல் வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! | What Should The Eelam Tamils Do Now

இதன் ஊடாகவே முற்றிலும் அறிவார்ந்த, தத்துவார்த்த சிந்தனை வயப்பட்ட கருத்து மண்டலம் தமிழ் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டியது விடுதலைக்கான பாதையின் முன் நிபந்தனையாகும்.

இங்கே அரசியல் வேலைத்திட்டம் என்கின்ற போது இந்த அரசியல் வேலைத்திட்டம் இரண்டு வகைகளில் இரண்டு தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. ஒன்று புலம்பபெயர் ஈழத் தமிழர் புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து கொண்டு தமிழ் இனத்தின் விடுதலைக்கான, அரசியல் வேலை திட்டத்தை முன்னெடுப்பது.

இரண்டாவது இலங்கை தீவுக்குள் இலங்கை அரசின் இறையாண்மைக்கு உட்பட்டிருக்கும் தமிழர் தாயகத்தில் நிலவுகின்ற கள ஜதார்தத்திற்கு பொருத்தமானதாகவும், இலங்கை அரசியல் யாப்பிற்குள் இருக்கின்ற இடைவெளிகள், ஓட்டைகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் இருப்பை தாயக நிலத்தில் உறுதிப்படுத்தக் கூடியவரான தமிழ் தேசிய கட்டுமானங்களை செய்வதற்கு ஏற்ற ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை எழுத்து வடிவில் முன்வைத்து தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல் கட்சிகள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது.

அதே நேரத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சர்வதேச அரசியலை தமிழ் மக்களுக்கு பக்கம் திருப்பக் கூடிய வகையில் உலகளாவிய கண்ணோட்டத்திலும், இந்தோ-பசுபிக் பிராந்திய கண்ணோட்டத்திலும், தமிழர் தாயகத்தின் கேந்திர அமைவிடம் சார்ந்த கண்ணோட்டத்திலும், இந்து பசுபிக் சமுத்திர அரசியல் போட்டோ போட்டியின் கண்ணோட்டத்துடனும் தமிழ் தேசிய கட்டுமானங்களை நிலை நிறுத்துவதற்கும், தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆதரவு திரட்ட கூடியதுமான ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை எழுத்து வடிவில் முன்வைக்க வேண்டும்.

ஈழத் தமிழினத்திற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அரசியல் பொருளியல் பலம் என்பது தமிழினத்தின் விடுதலைக்கு முக்கிய பங்கையும் பாத்திரத்தையும் வகிக்க வல்லது. அவர்களால் மேற்குலகில் ஒரு சர்வதேச அரசியல் தளத்தை தொடர்ந்து தக்க வைக்கவும், கட்டி வளர்க்கவும், தாயகத்தை நோக்கி திருப்பக் கூடியதுமான வசதிகளும், வாய்ப்புகளும், வல்லமையும் அவர்களுக்க உண்டு.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி பலி

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி பலி

தமிழ் மக்களுக்கு விடுதலை

இவ்வாறு சக்தி மிக்க புலம்பெயறிகள் ஒரு அரசியல் வேலை திட்டத்தை எழுத்து வடிவில் முன்வைக்காமல் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு விடுதலைக்கான பயணப்பாதையை சரிவர புரிய வைக்க முடியாது.

அது மாத்திரமல்ல புலம்பெயர் மக்களை ஒருங்கிணைக்கவும் முடியாது. ஒரு புதிய அரசியல் வேலை திட்டத்தை முன் வைக்காமல் தமிழ்த் தேசிய கட்டுமானங்களை தேசங்கள் கடந்து உருவாக்கவும் முடியாது.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! | What Should The Eelam Tamils Do Now

இன்றைய நவீன உலகில் தேசங்கள் கடந்த தேசியம் வலுவடைந்து செல்கிறது. தேசங்கள் கடந்து தேசியக் செயற்பாடுகள் தேசிய இனங்களின் விடுதலைக்கு வழிசமைக்கும். உலக வரலாற்றில் யூத இனத்தின் தேசம் கடந்த தேசிய ஒருங்கிணைப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் இழந்து போன மண்ணை அவர்கள் மீட்டெடுக்க முடிந்துள்ளது என்ற வரலாற்று உதாரணம் ஒன்று நம் கண் முன்னே உள்ளது.

அந்த வரலாற்று உதாரணத்தை இன்றைய காலச் சூழலுக்கு பொருத்தமானதாக தமிழ் மக்களின் பண்பாட்டிகளுக்கும் வரலாற்றியலுக்கும் ஏற்ற வகையில் பிரதியெடுத்து பயன்படுத்த முடியும்.

இதற்கு ஒரு உதாரணம் ஒன்றையும் குறிப்பிட வேண்டி உள்ளது. யூதர்கள் தமது அன்றாட துன்பங்கள் துயரங்கள் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகளை யூத தினக் குறிப்பேடாக (Jewish Diary) இந்த நிமிடம் வரையும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

அதேபோல ஈழத் தமிழர்களும் ஈழத் தமிழர் தினக் குறிப்பேடு (Eelam Tamil’s diary) என்ற ஒன்றை ஆரம்பித்து பதிவிட வேண்டும். இவ்வாறு ஈழத் தமிழர்கள் தமது தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் வேலை திட்டத்தை இரண்டு தளங்களில் முன்வைக்கின்ற போது தாயகத்தின் தளம் குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள் மாத்திரமே நின்று செயல்பட முடியும்.

ஆயினும் புலம்பெயர் அரசியல் தளம் என்பது பல்வேறு பட்ட சாதகத் தன்மைகளைக் கொண்டது. அது மாத்திரமல்ல சுயாதீனமானதும் வீரியமாகவும் செயற்படுவதற்கான அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் கொண்டிருப்பதனால் புலம்பெயர் அரசியல் செயற்படுதளம் இப்போது பலமானதாகவும் நிலையானதாகவும் நின்று ஈழத் தமிழருடைய விடுதலைக்கான பாதையில் முக்கிய பங்கையும், பாத்திரத்தையும் வகிக்க முடியும். விடுதலைக்காக போராடும் தமிழ்த்தேசிய இனம் தன்னை அரசாக சிந்தித்து அரசாங்கமாக செயல்பட வேண்டியது அவசியமானது.

ஈரான் மிகப்பெரிய விலையை செலுத்த வேண்டும்! நெதன்யாகு எச்சரிக்கை சமிக்ஞை

ஈரான் மிகப்பெரிய விலையை செலுத்த வேண்டும்! நெதன்யாகு எச்சரிக்கை சமிக்ஞை

வெளியுறவு கொள்கை

தமக்கான ஒரு தனி அரசை அமைக்கப் போராடும் ஒரு தேசிய இனம் அரசுக்குரிய அனைத்து கட்டுமானங்களையும் போராடிக் கொண்டிருக்கின்ற போது அது கட்டமைப்புச் கட்டமைப்பு செய்வது என்பது இலகுவானது ஒன்றல்ல.

ஆயினும் விடுதலைக்கான போராட்டம் மிக கடினமானதுதான். எத்தகைய நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து ஏற்படுகின்ற சவால்களுக்கு எதிர்நீச்சல் இட்டு போராடினால் மட்டுமே விடுதலை என்ற இலக்கிய அடைய முடியும்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! | What Should The Eelam Tamils Do Now

எனவே ஒரு தேசிய இனம் தனக்கான அரசுக்குரிய கட்டுமானங்களை கட்டமைப்பு செய்வது அவசியமானது. அத்தகைய அரசு கட்டுமானங்களை செய்வதற்கு அதற்கு சர்வதேச ஆதரவும், சர்வதேச நியமங்களை பின்பற்றுகிறோம் என்று சர்வதேச அரசுகள் நம்பக்கூடிய வகையில் நடந்தும் காட்ட வேண்டியுள்ளது.

எனவே ஈழத் தமிழர்கள் தமக்கான ஒரு வெளியுறவுக் கொள்கை(Foreign policy) வரைபை எழுத்து மூலம் வரைந்து முன் வைக்க வேண்டும். ஒரு நிலையான வெளியுறவுக் கொள்கை வரைபு இல்லாமல் சர்வதேச ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கவும் முடியாது.

சர்வதேச ஆதரவை திரட்டவும் முடியாது. சர்வதேச அரசுகளால் நாம் நம்பப்படவும் மாட்டோம். ஆகவே "நாம் சரியாக நடக்கிறோம் என்பது மாத்திரமல்ல நாம் சரியாக நடக்கிறோம் என்பது மற்றவர்களால் நம்பப்படவும் வேண்டும்" அதற்கு ஏற்ற வகையில் ஈழத் தமிழர் தமக்குரிய ஒரு வெளியுறவுக் கொள்கையை வகுத்து முன்வைக்க வேண்டும்.

இத்தகைய ஒரு வெளியுறவுக் கொள்கையை புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே இன்றைய நிலையில் வகுக்க முடியும். தாயகத்தில் அத்தகைய வெளிவரவு கொள்கையை வகிக்க இலங்கை அரசியல் யாப்பும், இலங்கை அரசின் சட்டமும், இறைமையும் இடம் கொடுக்காது என்பதையும் இங்கே கருத்துக் கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்கள் வகுக்கின்ற வெளியுறவு கொள்கையின் நிலைப்பாடுதான் தமிழ் மக்களுக்கான தனி அரசை அமைப்பதற்கான மூல மந்திரமாக அமையும். எனவே ஈழத் தமிழருடைய வெளியுறவுக் கொள்கை என்பது இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரசியல் நிலையும், இந்து சமுத்திரம் சார்ந்து மேற்குலகம் கையாளுகின்ற இந்தோ பசிபிக் கொள்கையிலும், இந்திய அரசின் இறைமையும், அதன் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய வகையிலும் ஈழத் தமிழர்கள் எந்த அணியில் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக வரையறுக்கும் வகையிலும் வெளியுறவு கொள்கை அமைய வேண்டியது அவசியமானது.

இன்றைய உலகில் நலன்களே முக்கியமானவை. பரஸ்பர நலன்களின் அடிப்படையிலேயே உறவுகள் மலரும். இந்த அடிப்படையில் விடுதலைக்குப் போராடுகின்ற தமிழ்த்தேசிய இனம் இந்து சமுத்திரத்தில் ஒரு தனியான அரசை உருவாக்குகின்றபோது தமிழினம் பெறுகின்ற பங்கும் பாத்திரமும் எத்தகையதோ அத்தகைய பங்கும் பாத்திரத்தை அண்டை நாடும், மேற்குலகமும் வகிக்க முனைவர்.

இங்கே அவரவருக்கு வழங்கப்படும் வேண்டிய பங்கை கொடுக்க வேண்டியதும், பகிரப்பட வேண்டியதும் அவசியமானது. பங்கு கொடுத்தல் இன்றி, பங்கு பகிரப்படுதல் இன்றி இந்த உலகத்தில் எந்த ஒரு அரசும் யாருக்கும் துணை நிற்க மாட்டாது.

ஈரானுடன் கைகோர்த்த சீனாவுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி தடை

ஈரானுடன் கைகோர்த்த சீனாவுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி தடை

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு

ஆகவே இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பிலும், அதனுடைய வளத்திலும் அவரவருக்குரிய பங்கும், பாத்திரமும் கொடுக்கப்பட வேண்டியது அவசியமானது என்பது நியதியும், நிர்ப்பந்தமுமாகும்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! | What Should The Eelam Tamils Do Now

இன்றைய உலகில் யாரும் தனித்து வாழ்ந்திட முடியாது அணி சேராமல், கூட்டணையாமல், பங்கு போடாமல் யாரும் உறவுகொள்ள முடியாது நிலைத்து வாழ்ந்திட முடியாது.

அந்த அடிப்படையில் புலம்பெயர் தேசங்களின் வாழ்நிலை இருப்பியல் நிலையிலிருந்து கொண்டு புலம்பெயர் தமிழர்கள் ஆற்றக்கூடிய தமிழ் தேசிய அரசியல் முன்னெடுப்புகள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்...

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 20 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Markham, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US