இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்ப்பகுதியில் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் இதில் முற்குற்முள்ள உள்ள ஒருவருக்கு 18 மாதகால கட்டாயச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது
கடந்த 09.02.2025 அதிகாலை இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களும் 09.02.2025 மாலை கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து குறித்த 14 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பன்னிரென்டு மாத சிறை
குறித்த வழக்கானது இன்றைய தினம் பகல் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் ஒரு இழுவைப்படகுடன் தொடர்பு பட்ட பதினொரு பேருக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பன்னிரென்டு மாத சிறையும் இரண்டாது குற்றச் சாட்டுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
மேலும் தண்டப்பணம் செலுத்த தவறின் ஆறுமாத சிறைத் தன்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆறு மில்லியன் ரூபா தண்டப்பணம்
படகை செலுத்தியமை மற்றும் படகு உரிமை ஆகிய இரண்டு குற்றச் சாட்டுக்கும் தலா ஆறு மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் தண்டம் செலுத்த தவறின் தலா ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மற்றைய படகுடன் தொடர்பட்ட மூன்று பேருக்கும் முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பன்னிரென்டு மாத சிறையும் இரண்டாது குற்றச் சாட்டுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் செலுத்த தவறின் ஆறுமாத சிறைத் தன்டனையும்.
இதில் ஏற்கனவே யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தன்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு பதினெட்டு மாதகால கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - யது