கோட்டாபயவின் ஆட்சிக்காலம் தொடர்பான மனு! நீதிமன்றத்தின் தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தனது தீர்ப்பை அறிவிப்பதனை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் முடிவுகளை இரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீதான விசாரணை
தற்போது குறித்த மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மனு தொடர்பான தனது தீர்ப்பை அறிவிப்பதனை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேலும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னையா, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க மற்றும் பலர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
