சாமர சம்பத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான வழக்குகளை ஜனவரி 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
ஊவா மாகாண சபையின் பெயரில் அரச வங்கிகளில் வைத்திருந்த ஆறு நிலையான கணக்குகளை முதிர்ச்சிக்கு முன்னர் திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 1.73 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் சட்டத்தின்
பிணையில் உள்ள சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர், ஆவணங்கள் தொடர்பான பகுப்பாய்வாளர் அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆவணங்களை வரவழைக்க நினைவூட்டல் அனுப்ப உத்தரவிட்ட தலைமை நீதவான், முறைப்பாட்டாளர்களின் விசாரணையை ஜனவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது, மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பையை வழங்க வங்கியிடம் நிதியுதவி கோரியுள்ளார்.
ஆனால் இந்த ஆறு கணக்குகளையும் வேண்டுமென்றே மூடிய நிலையில், இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரிவு 70 இன் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
