எதிர்வரும் 15ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ள கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை தொடர்பான வழக்குகள்
கிளிநொச்சியில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலையிலிருந்து கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்த இருவேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் குறித்த இரு வழக்குகளும் எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைகளுக்காக தவணையிடப்பட்டுள்ளன.
கரைச்சி பிரதேச சபையினால் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பா.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிபதி, ஆடைத் தொழிற்சாலைகளை மூடித்தான் தொற்று நோயினை கட்டுப்படுத்த வேண்டுமா என்ற விளக்க அறிக்கையினை தவணையிடப்பட்ட எதிர்வரும் 15ஆம் திகதி நீதிமன்றில் அறிக்கையிடுமாறு இன்று கட்டளை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, குறித்த ஆடைத்தொழிற்சாலையிலிருந்து சமூக தொற்று ஏற்படாத வகையில் தற்காலிகமாக ஆடைத் தொழிற்சாலையை மூடுமாறு பொது மக்கள் 6 பேர் மனு ஒன்றை இன்று சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த மனுவினையும் ஏற்றுக்கொண்ட நீதவான், அதனையும் எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைகளிற்காக தவணையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam