சிங்கப்பூர் நீதிமன்றை குழப்பத்தில் ஆழ்த்திய இலங்கையர்?
சிங்கப்பூர் நீதிமன்றில் விசித்திரமான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுள்ளது, அந்நாட்டு குடிவரவு சட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டதாக நபர் ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 67 வயதான நபர் ஒருவர் மீது இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இருபது ஆண்டுகளாக சட்டவிரோதமான முறையில் குடிவரவுச் சட்டங்களை மீறி குறித்த நபர் சிங்கப்பூரில் தங்கியிருந்தார் என நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பொய்யான பல பெயர்களில் பல்வேறு ஆவணங்களைப் பயன்படுத்தி தங்கியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபரின் பெயர் மகேஸ் பத்மநாதன் என தெரிவிக்கப்பட்டு ஆரம்பத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் பின்னர், இந்த நபரிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில் இனந்தெரியாத நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒருவரின் ஆள் அடையாளம் பற்றி உறுதிப்படுத்தாது எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுப்பது என நீதவான் அடம் நகோதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இனந்தெரியாத ஒருவருக்கு எதிராக எவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது என தெரிவித்துள்ளார்.
பின்னர் இந்த நபரிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில் அவரது பெயரான மகேஸ் பத்மநாதன் என திருத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாத கால சிறைத்தண்டனையும், 6000 டொலர் அபராதமும் விதிக்கப்படலாம்.
கடந்த பெப்ரவரி மாதம் 6ம் திகதி இந்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
