நீதிமன்ற அவமதிப்பு மனு தொடர்பில் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல்
வில்பத்து தேசிய பூங்கா விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கத் தவறியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில், வனச்சட்டத்தின் விதிகளின்படி மரம் நடும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வனப்பாதுகாப்புத் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற அவமதிப்பு மனு
எனினும், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற அடிப்படையில் சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையம் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவரை ஏன் தண்டிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் காரணம் காட்டவேண்டும் என்று உத்தரவிடுமாறு மனுதாரர் இந்த மனுவில் கோரியுள்ளது.
இந்தநிலையில் பிரதிவாதியான ரிசாத் பதியுதீனுக்கு அறிவித்தலை அனுப்பிய நீதிமன்றம், ஜூன் 28 ஆதரவு சமர்ப்பணங்களுக்காக விசாரணையை ஒத்திவைத்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
