முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம் : கல்முனை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு தடையை நீக்க கல்முனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்றையதினம் (17.05.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிஸ்த்தரும் காரைதீவு முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ,மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரன் பிரதீபன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோர் மீது பெரிய நீலவணை பொலிஸாரினால் தடை உத்தரவு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னிலையான சட்டத்தரணிகள்
இந்த தடை உத்தரவை நீக்க கோரி குறித்த நபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான சிவரஞ்சித் மற்றும் மதிவாணன், ரிபாஸ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இந்நிலையில் உறவுகளை நினைவு கூறுவது சட்டத்துக்கு முறனில்லாத வகையில் நடைபெற வேண்டும் என நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டு இந்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
