கனடா அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் பண மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்களிடம் பணத்தை பெற்றுள்ளார்.
ஒருவரிடமிருந்து தலா 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேரிடம் பணம் பெற்றிருந்ததுடன், மற்றொருவரிடம் 3 பவுண் தங்க சங்கிலி ஒன்றையும் பெற்றுள்ளார்.
கனடா அனுப்பாது மோசடி
எனினும் கனடா அனுப்பாது மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
மேலதிக
விசாரணைகளின் பின் குறித்த நபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில்
அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
