ஆயிரக்கணக்கான வெற்றிடங்கள்! அரசாங்க தொழிலுக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, 23,344 ஆசிரியர்கள் உட்பட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க சேவையில் ஆட்சேர்ப்பு
அரசாங்க சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை மறுஆய்வு செய்வதற்கும், தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் வெற்றிடத்தை அடையாளம் காண்பதற்கும், செய்யப்பட வேண்டிய ஆட்சேர்ப்புகளின் எண்ணிக்கை குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவை நியமிக்க 30/12/2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கமைய, அந்தந்த அமைச்சகங்களின் கீழ் உள்ள துறைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த அமைச்சகங்களால் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேவையான துறைகளுக்கு ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்க பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவு இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 12 நிமிடங்கள் முன்
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri