பொதுவெளியில் வெற்றிலை எச்சில் துப்பியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பொது சந்தையில் வெற்றிலை எச்சில் துப்பியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று(19.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெற்றிலை எச்சில் துப்பியவருக்கு தண்டப்பணம்
அத்துடன், பொது சந்தையில் வெற்றிலை எச்சில் துப்பியவருக்கு களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனனால் 1883ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க தண்டனைகள் சட்டக்கோவை மூலம் இன்று(19.06.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது இதில் குறித்த நபருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 1500 ரூபா தண்டப்பணமும் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.