மனுஷ நாணயக்கார தொடர்பில் கருத்து வெளியிட சுதத்த திலகசிறிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை
தேசிய மக்கள் சக்தியின் முன்னணி ஆதரவாளரான யூடியூப்பர் சுதத்த திலகசிறிக்கு கொழும்பு நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடையொன்று விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை அடுத்து, யூடியூபர் சுதத்த திலகசிறிக்கு எதிராக குறித்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுஷ நாணயக்காரவின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் முன்னிலையாகி சுதத்த திலகசிறிக்கு எதிரான வாதங்களை முன்வைத்தார்.
இடைக்காலத் தடை உத்தரவு
அதனையடுத்து அலிசப்ரியின் வாதங்களைப் பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே, இன்று (30) மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுதத்த திலகசிறி அவதூறு கருத்துகளை வெளியிடுவதற்கோ அல்லது அவதூறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ இந்த இடைக்காலத் தடை உத்தரவு மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

பிரச்சனையில் இருக்கும் முத்துவை நேரம் பார்த்து பழி வாங்கிய அருண்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
