திஸ்ஸ குட்டியாராச்சியின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த மொட்டுக்கட்சி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் கூற்று பொதுஜன பெரமுன கட்சியின் கருத்தோ அல்லது கட்சியால் உருவாக்கப்பட்ட கருத்தோ அல்ல என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னணி சோசலிச கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவின் கூற்றை மோற்கோள் காட்டியே திஸ்ஸ குட்டியாராச்சி ஜனாதிபதி தொடர்பிலான கருத்தை தெரிவித்தார்.
பகிரங்க மன்னிப்பு
அது அவரின் கருத்தல்ல. எமக்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுக்கள் சமீப காலமாக அதிகமாக பரப்பப்பட்டு வந்துள்ளன. அவற்றுக்கு எதிராக நாங்கள் ஏன் வழக்கு தொடரவில்லையென சமூகத்தில் எமக்கெதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவிப்பதாக திஸ்ஸ குட்டியாராச்சி கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நேற்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அறிவித்தார்.
10 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே, திஸ்ஸ குட்டியாராச்சி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் இவ்வாறு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        