கந்தளாயில் நேருக்கு நேர் மோதிய இரு வாகனங்கள் : இருவர் படுகாயம்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கூடு கோபுரத்திற்கு அருகாமையில் இன்று (30) அதிகாலை 5.00 மணியளவில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கோதுமை மாவு ஏற்றி கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கெண்டைனரும், கொழும்பிலிருந்து வாகன உதிரிப்பாகங்களை ஏற்றி கந்தளாய் 92வது கட்டைப்பகுதிக்குச் சென்ற வேனும் ஒரே நேரத்தில் எதிரே வந்தபோது நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம்
குறித்த வேன் சாரதியும், வேனில் துணைக்கு வந்த மற்றொருவரும் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெண்டைனர் சாரதிக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், விபத்துக்கு வேன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் முக்கிய காரணமாக இருந்ததாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri