வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரம்: தந்தை எழுப்பியுள்ள கேள்வி (PHOTOS)
ஒரு இராஜாங்க அமைச்சரின் வீட்டில் உள்ள சிசிடிவி கமராக்கள் வேலை செய்யாததற்கான காரணம் என்ன என பாலசுந்தரத்தின் தந்தை கேள்வியெழுப்பியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் (Sathasivam Viyalendiran) வீட்டுக்கு முன்பாக பாலசுந்தரம் (Balasundaram) சுட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாலசுந்தரத்தின் தந்தை குறித்த விடயத்தை வினவியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒரு இராஜாங்க அமைச்சரின் வீட்டில் உள்ள சிசிடிவி கமராக்கள் வேலை செய்யாததற்கான காரணம் என்ன? அல்லது அவரது வீதியிலுள்ள மற்றைய கமராக்கள் வேலை செய்யாததற்கான காரணம் என்ன ?
திட்டம் போட்டு அடித்தும், வெடி வைத்தும் கொலை செய்துள்ளனர் என்பது தான் உண்மையாய் இருக்கின்றது என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த வழக்கு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் பாலசுந்தரம்
