தயாசிறி ஜயசேகர மனு தொடர்பான இறுதி தீர்மானம் இன்று
புதிய இணைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்துள்ளது.
அத்துடன், தயாசிறி ஜயசேகர வகித்து வந்த கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்படுவதற்கு நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராகவும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கட்சியின் அரசியலமைப்புக்கு முரணான வகையில் தனது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியமைக்கு எதிராக தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த முறைப்பாட்டின் ஆரம்பக்கட்ட பரிசீலனைக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தி, அக்கட்சியால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த தீர்மானம் இன்று (08.09.2023)அறிவிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அவருடைய மனு மீதான தீர்மானம் குறித்து இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சவாலுக்குட்படுத்தும் தயாசிறி
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக தயாசிறி ஜயசேகர நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராக செயல்பட்ட தயாசிறி ஜயசேகரவின் பதவி நீக்கப்பட்டு கட்சி உறுப்புரிமையும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சனல் 4 காணொளி விவகாரம்: தீவிரவாதிகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் உதவியதாக பிள்ளையான் குற்றச்சாட்டு
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam