பிரதேச சபை ஊழியர்கள் மீது தாக்குதல் : விளக்கமறியல் நீடிப்பு!
முள்ளியவளை பிரதேச சபையின் சுகாதார ஊழியர்கள் சுகாதார பணிசெய்து கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முள்ளிவளை பிரதேச சபையின் உப அலுவலக சுகாதார ஊழியர்கள்
முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய முன்பக்க வீதியினை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்நத போது இரண்டு உந்துருளியில் நான்கு பேர் கொண்ட கும்பல் பிரதேச சபை ஊழியர்களின் காட்டுக்கத்தியினை பறித்து எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (3) இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் பிரதேச சபையினால் முள்ளியவளை பிரதேச சபையின் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியமை, பணிக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அச்சுறுத்தியமை என்பன தொடர்பில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைய நேற்று (4) இரண்டு சந்தேக நபர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை இன்று (05) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.பரஞ்சோதி அவர்களின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும 09.12.21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஏனைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் பொலீஸாருக்கு பணித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 1 மணி நேரம் முன்

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
