கொழும்பு புறநகர் பகுதியில் கலாவதியான அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கொழும்பு - பொரளை பகுதியில் அமைந்துள்ள பிரபல நிறுவனமொன்று, விலைக் குறிப்புகள் இன்றி காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை விற்பனை செய்த குற்றத்திற்கான நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொரளை பகுதியில் இயங்கி வரும் பிரபல அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் கலாவதியான பொருட்கள் மற்றும் வாசணை திரவியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நுகர்வோர் விவகார அதிகாரசபையால் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிமன்ற உத்தரவு
இதில் ஒரு வழக்கின் தொடர்பில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் (எண். 5) முன்பாக 3 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஒகஸ்ட் 18 ஆம் தேதி, நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பாக நடத்திய சோதனையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அதிகபட்ச சில்லறை விலையைக் குறிப்பிடாமல் வாசனைத் திரவியங்களை விற்பனை செய்ததும், காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்ததும், மற்றும் தேவையான தகவல்கள் இன்றி காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட நிலையில், நீதவான் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ. 300,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சற்று அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தால் மகிந்த கைது செய்யப்படலாம்! அநுராதபுர பேரணி மேடையில் இருந்து வெளியான தகவல்