தேசிய பொலிஸ் ஆணைக்குழு மீது அதிருப்தி வெளியிட்ட நீதிமன்றம்
தாக்குதல் ஒன்று தொடர்பாக மூத்த துணை பொலிஸ் அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உட்பட ஐந்து அதிகாரிகள் மீதான உத்தரவுகளை, தேசிய பொலிஸ் ஆணையகம், ஏழு மாதங்களாகியும், இன்னும் நடைமுறைபடுத்தவில்லை என்று உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் வழங்கிய உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகலைக் கோரி, 2015, மார்ச் 3ஆம் திகதி, உயர் நீதிமன்றத்திற்கு, தேசிய பொலிஸ் ஆணையகம் கடிதம் அனுப்பியதை அடுத்து இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.
நீதியரசர்கள் திலீப் நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் சம்பத் பி. அபயகோன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவு
அத்துடன், மே 8ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் உண்மைகளை தெரிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மிஷாரா ரணசிங்க என்பவர், ஒரு வாகனத்தை முந்திச் சென்ற நிலையில், கொடித்துவக்கு மற்றும் நான்கு பிரதிவாதி அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறி, அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதன் அடிப்படையிலேயே, மூத்த துணை பொலிஸ் அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உட்பட்ட அதிகாரிகள் மீது, உயர் நீதிமன்றம், உத்தரவுகளை பிறப்பித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
