விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் மனு தாக்கல்! லக்சம்பேர்க் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கும் முடிவை இரத்து செய்யுமாறு விடுத்த கோரிக்கையினை லக்சம்பேர்க் உயர் நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை பட்டியலில் சேர்க்கும் முடிவை இரத்து செய்ய வேண்டும் என்பதற்கான நியாயமாக காரணங்கள் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்படவில்லை எனவும், இதனால் மனுவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த வழக்கு விசாரணைக்கான சட்ட செலவை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
பிரபல நடிகைக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் நடக்கவிருந்த திருமணம்.. யார் அந்த நடிகை தெரியுமா? Cineulagam