வவுனியாவில் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை
எதிர்வரும் சுதந்திர தினமன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு வவுனியா பொலிஸார் தடை கோரிய நிலையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்களிற்கு குறித்த தடை உத்தரவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தடை உத்தரவு பத்திரத்தில்,
இன்றைய தினம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரால் நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதி வரை வவனியா ஏ9 வீதியிலோ அல்லது தபால் காரியாலயம் முன்பாகவோ, பழைய பஸ் நிலையம் முன்பாகவோ 73ஆவது தேசிய சுதந்திரதினத்திற்கு எதிப்பு தெரிவித்து தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளை விடுவிக்காமை தொடர்பான கருத்துக்களை பிரதானமாக முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கை செய்யவோ அல்லது ஆர்ப்பாட்டமோ, கால்நடையாத்திரை போன்றவற்றை செய்ய தடை உத்தரவு கேட்டு 1979.இல15 குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை பிரிவு 106 (1) இன் படி நீதிமன்றிற்கு அறிக்கை இடப்பட்டுள்ளது.
நீதிமன்றிற்கு உட்படுத்திய சம்பவத்தை பரிசீலினை செய்து பார்த்து வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாகவோ, ஏ 9 பிரதான வீதியிலோ, தபால் காரியாலயம் முன்பாகவும் அத்துடன் வவுனியா மாவட்ட பொலிஸ் பிரதேசத்திலோ ஆர்ப்பாட்டமோ, பாத யாத்திரையோ செய்தால் கொரோனா வைரஸ் நிலைமையின் போது பொது சுகாதாரத்திற்கும் மக்களிற்கும் பாதிப்பு ஏற்படும் என அறிய முடிகிறது.
எனவே குறித்த பிரதேசங்களில் நாளையில் இருந்து எதிர்வரும் 6ஆம் திகதி வரை 73ஆவது தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 46ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வை இலக்காக கொண்டு செய்யப்படுகின்றது என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்ப்பாட்டம் அல்லது பாத யாத்திரை அல்லது வேறு குற்றசெயற்பாடுகள் செய்யக்கூடாதென சண்முகராஜ் சறோஜாதேவி, சிவநாதன் ஜெனிற்றா, காசிப்பிள்ளை ஜெயவனிதா, கிறிஸ்தோப்பு கிருஸ்ணன்டயஸ் இராசமடு ஆகியவர்களிற்கு 1979.இல 15 குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை பிரிவு 106 (1) இன் கீழ் கட்டளையிடப்படுகின்றது.
இது சம்பந்தமாக கருத்து கூற 2021.02.15 அன்று காலை 09 மணிக்கு கொளரவ நீதிமன்றிற்கு முற்படுமாறு கட்டளையிடுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
