அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்: பெருமளவில் குவிக்கப்படும் பொலிஸார் (Video)
கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.10.2023) ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சில தரப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், செரமிக் சந்தி, சுற்றுவட்டம் வரையும் அங்கிருந்து பாலதக்ச மாவத்தைக்குள்ளும் ஆர்ப்பாட்டகார்கள் செல்வதை தடுக்கும் விதமாக கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

கோட்டை நீதவான் நீதிமன்றம்
இதற்கமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதுஷன் சந்திரஜித், கல்வெவ சிறிதம்ம தேரர், துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின், தம்மிக்க முனசிங்க, தென்னே ஞானானந்த தேரர் உள்ளிட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 14 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan