யாழ் இளவாலையில் கூரியர் சேவையாளர் மீது தாக்குதல்
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கூரியர் சேவையில் பொருட்களை வழங்க வந்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஒன்லைனில் பதிவு செய்யப்பட்ட பொருளை வழங்குவதற்காக நேற்றையதினம் (31.08.2023) இளவாலை பகுதிக்கு சென்றுள்ளார்.
முறைப்பாடு பதிவு
அவர் குறித்த பொருளை வழங்கிவிட்டு பணத்தினை கேட்டவேளை வீட்டினுள் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
தாக்குதல் நடாத்தியவரை கைது செய்த பொலிஸார் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri