ஹம்பாந்தோட்டையில் அதிகாலையிலேயே இரட்டை கொலைகள்! தீவிர விசாரணையில் பொலிஸார்
ஹம்பாந்தோட்டை,ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (07) அதிகாலையில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்ட தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த ஆணும் பெண்ணும் 28 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் ரன்ன மற்றும் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம்
முகத்தை மறைத்த நிலையில் சுமார் ஐந்து பேர் கொண்ட குழு வீட்டிற்குள் நுழைந்து கூர்மையான ஆயுதங்களால் அவர்களைத் தாக்கியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீதவான் விசாரணைக்காக சடலங்கள் சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் உள்ளன.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




