கோர விபத்தில் சிக்கிய இளம் கணவன் - மனைவி பலி
இரத்தினபுரி - பாணந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.
நிமாலி பண்டார என்ற 30 வயதான பெண் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார்.
அவர் அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
கணவன் மரணம்
கடமையை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்தது. சம்பவ இடத்திலேயே கணவரான 34 வயதான ஆசிரி விஜேசுந்தர உயிரிழந்துள்ளதாகவும் கிரியெல்ல பொலிஸார் தெரிவித்தனர். கணவர் தேசிய தொலைக்காட்சியில் பணிபுரிகிறார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சொகுசு ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதுடன் மற்றுமொரு காரிலும் மோதுண்டமையினால் அதில் பயணித்த பெண் ஒருவரும் சிறு குழந்தையும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெறவிருந்த நிலையில், கணவரின் சடலம் கிரியெல்ல நெடுன் விஹாரை வீதியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது அதிவேகமாக செலுத்தி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சொகுசு ஜீப்பை ஓட்டிச் சென்ற 24 வயதுடைய சாரதி, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
