தென்னிலங்கையில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் - தம்பதியின் அடாவடித்தனம்
களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தில் லொறியையும், நான்கு பயணிகளையும் வலுக்கட்டாயமாக கடத்தியதாக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இங்கிரிய, மேல் பிரிவை சேர்ந்த நபரின் வாகனமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
வாகனத்தின் உரிமையாளரான முறைப்பாட்டாளர் சுமார் ஆறு ஆண்டுகளாக அட்டைப் பெட்டி வர்த்தகம் செய்து வருகிறார்.
லொறி கொள்வனவு
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, கட்டண அடிப்படையில் 10,500,000 ரூபாய்க்கு மெக்சிமோ வகை லொறியை கொள்வனவு செய்துள்ளார்.

தவணை கொடுப்பனவை முறையாக செலுத்த முடியாததால், குத்தகை நிறுவனத்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இங்கிரிய, நம்பபனவை சேர்ந்த சந்தேக நபரிடம் 1.1 மில்லியன் ரூபாய் கடனைப் பெற்று, லொறியை முறைப்பாட்டாளர் மீட்டுள்ளார்.
லொறியை கடத்திய சந்தேக நபர் தனது கடனைத் தீர்க்க மேலும் 3.5 லட்சம் ரூபாய் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
குத்தகை வசதி
இதனை தொடர்ந்து, அதன் உரிமையாளர் தனது நண்பர் மூலம் லொறிக்கான குத்தகை வசதியை பெற்று, அதில் முதலில் 1,25,000 ரூபாய் தொகையை சந்தேக நபருக்கு வழங்கியுள்ளார்.
இந்த காலகட்டத்தில், முறைப்பாட்டாளரால் இரண்டு மாதங்களாக வட்டி செலுத்த முடியவில்லை, சந்தேக நபரும் அவரது கணவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்து இங்கிரியவில் உள்ள மஹா இங்கிரிய கல்லறைக்கு அருகில் லொறியை நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து வலுக்கட்டாயமாக லொறியில் பயணித்தவர்களுடன் கடத்தி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.