வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர் மர்மமான முறையில் திடீரென உயிரிழப்பு
நுவரெலியாவின் மீப்பிலிமானபகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், இன்று காலை (03) நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஒரு கப்பல் கேப்டன் என்றும், அவருக்கு 52 வயது என்றும், அவரது மனைவிக்கு 46 வயது என்றும் நானு ஓயா பொலிஸ் தெரிவித்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
அவிசாவெல்லைவை சேர்ந்த தம்பதியினர், நுவரெலியாவின் மீப்பிலிமான பகுதியில் ஒரு சுற்றுலா விடுதியின் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும், அதற்காக அருகிலுள்ள ஒரு வீட்டை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து, விடுதியின் கட்டுமானம் முடியும் வரை அங்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தம்பதியினர் உறங்க சென்றபோது, ஒரு (BBQ) அடுப்பை அறையில் பற்றவைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
இன்று காலை உறவினர்கள் அவர்களது கைபேசிக்கு அழைத்தபோதும், அவர்கள் பதிலளிக்காததால், உள்ளூர் கிராம அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் வீட்டிற்குச்சென்று பார்த்தபோது, தம்பதியினர் உயிரிழந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
you may like this