தென்னிலங்கையில் தம்பதியின் மோசமான செயல் - சுற்றிவளைத்த பொலிஸார்
களுத்துறை வடக்கு பகுதியில் 5 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களை வைத்திருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்று தம்பதியை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் 50 மற்றும் 49 வயதுடைய கிதுலாவ பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.
போலி நாணயத்தாள்
களுத்துறை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் போலி நாணயத்தாள்கள் பரவலாக புழக்கத்தில் இருப்பதாக மேற்கு மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த தம்பதியினர் முன்னர் அகலவத்தை, களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை மற்றும் அச்சிடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் இந்த போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி ஹொரண, பொல்கசோவிட்ட, களுத்துறை, மத்துகம, பாணந்துறை போன்ற பல பகுதிகளில் பொருட்களை வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதி இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.