கொழும்பு புறநகர் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் தம்பதி கைது
கொழும்பின் புறநகரான பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவிற்கு உட்பட்ட இரு உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஸ்பேவயில் இருந்து மொரட்டுவை நோக்கிச் சென்ற பாரவூர்தியை நிறுத்துமாறு இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சமிக்ஞை செய்துள்ளனர்.
பாரவூர்தியை துரத்திச் சென்ற பொலிஸார்
எனினும் அஜாக்கிரதையாக ஓட்டப்பட்ட குறித்த பாரவூர்தி நிறுத்தப்படாமல் பயணித்துள்ள நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதனை துரத்திச் சென்றுள்ளனர்.
பின்னர், அந்த பாரவூர்தி அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, அதிலிருந்த ஒரு பெண் உட்பட கிட்டத்தட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர், பாரவூர்தியை நிறுத்துமாறு சைகை காட்டி அதனை துரத்திச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபர்கள் இருவர் கைது
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் தற்போது களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தம்பதிகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபர்களின் இரண்டு மகன்மார் உட்பட தாக்குதலுடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக் கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
