நாடு முடக்கப்படாது! - மகிந்த திட்டவட்டம்

Mahinda Rajapaksa Temple Trees
By Rakesh May 07, 2021 07:29 PM GMT
Report

நாடு என்ற ரீதியில் நாம் ஒன்றாக கைகோர்த்து இந்த சவால் மிகுந்த காலப்பகுதிக்கு முகங்கொடுப்போம் என அலரி மாளிகையில் இன்று (07) நடைபெற்ற ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் என்று அவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2014ஆம் ஆண்டளவில் திட்டமிடல் நிறைவுசெய்யப்பட்டிருந்த ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டம் கடந்த அரசால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் பிரதமரின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கமைய கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான 24 கிலோமீற்றர் வரையான முதற்கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களின் போது இரத்தினபுரி மற்றும் பெல்மதுல்ல வரை இந்த அதிவேக நெடுஞ்சாலை நீடிக்கப்படும். ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்தல், செலவைக் குறைத்தல், நேர வீண்விரயத்தைக் குறைத்தல், தேயிலை, ஆடை, சிறு ஏற்றுமதி பயிர் மற்றும் இரத்தினக்கல் சந்தை மற்றும் விநியோக இடங்களுக்கான அணுகலை எளிதாக்கல், சுற்றுலாத்துறை உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் போன்ற எதிர்பார்க்கப்படும் அனுகூலங்கள் பலவாகும்.

ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, "சப்ரகமுவ மாகாண மக்களுக்கு மிகவும் அண்மித்த ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

நாம் தற்போது ஆரம்பிப்பது இலங்கையின் ஏழாவது அதிவேக நெடுஞ்சாலையாகும். அன்று அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப காலப்பகுதி முதல் சப்ரகமுவ மாகாணத்தின் எமது அன்பார்ந்த மக்கள் இரத்தினபுரிக்கு அதிவேக நெடுஞ்சாலையொன்றை எப்போது நிர்மாணிப்பீர்கள் என எம்மிடம் கேட்டிருந்தமை எனக்கு நினைவிருக்கிறது.

அது தொடர்பில் கவனம் செலுத்தி, ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை ஆரம்பிப்பதற்கு நாம் கடந்த 2014ஆம் ஆண்டிலேயே திட்டமிட்டிருந்தோம். அன்று நாம் அதற்கான அனைத்து திட்டங்களையும் நிறைவுசெய்திருந்தோம்.

எனினும், அதனை ஆரம்பிப்பதற்கு முன்னர் தேர்தலில் தோல்வியடைந்து நாம் வீடு செல்ல நேர்ந்தது. அன்று ஆட்சிக்கு வந்த அரசு நாட்டின் அபிவிருத்தியை நாம் விட்டு சென்ற இடத்திலிருந்து ஆரம்பித்து முன்னெடுத்து செல்லும் என எண்ணினோம்.

ஆனால், அவர்களுக்கு அதிகாரத்தைப் பறித்தெடுக்கும் தேவை மாத்திரமே இருந்ததே தவிர நாட்டை அபிவிருத்தி செய்யும் தேவை இல்லை. அதனால் நாம் ஆரம்பித்திருந்த அனைத்தும் கடந்த அரசால் நிறுத்தப்பட்டது.

அது மாத்திரமன்றி நாம் செய்தவைக்காக எம்மைப் பழிவாங்கினர். நீதிமன்றம் மற்றும் ஆணைக்குழுக்களின் முன் எம்மை நிறுத்தினர். தேசிய பாதுகாப்பும், பொருளாதாரமும் பூச்சியப்படுத்தப்பட்டு, அபிவிருத்தி நிறுத்தப்பட்டிருந்த ஒரு நாட்டையே நாம் மீண்டும் பொறுப்பேற்றோம். எனினும், அந்தச் சவாலை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.

நாட்டை அபிவிருத்தி செய்தல், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றல் போன்று இந்த நாட்டு மக்களுக்கு எப்போதும் சிறந்ததை வழங்குவதே எமது தேவையாகக் காணப்பட்டது.

அதனால் எத்தகைய தடைகள் நேரிடினும், எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலேனும் நாம் ஒரு அரசு என்ற ரீதியில் நாம் முன்வைத்த கொள்கைகள் அயதார்த்தமாகும் வரை அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இன்று ஆரம்பிக்கப்படும் ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான முதல் கட்டத்தை இரண்டரை வருடங்களுக்குள் நிறைவு செய்வோம் என எமது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் என்னிடம் குறிப்பிட்டனர்.

அவர்கள் உள்ளிட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இந்த நெடுஞ்சாலையின் 24 கிலோமீற்றர் வரையான முதல் கட்டத்திற்காக ரூபாய் 54.7 பில்லியன் தேசிய நிதியை அரசு செலவிடுகின்றது. இதன் கட்டுமானப் பணிகளை உள்ளூர் நிறுவனமொன்றே பொறுப்பேற்றுள்ளது.

முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன் இங்கிரிய முதல் இரத்தினபுரி வரையான இரண்டாம் கட்டம் மற்றும் இரத்தினபுரி முதல் பெல்மதுல்ல வரையான மூன்றாம் கட்டம் என ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என நான் நம்புகின்றேன். அதிவேக நெடுஞ்சாலைகளே இந்த நாட்டில் அதிக விமர்சனத்துக்கு உள்ளான திட்டமாகும்.

ஆனால், அவ்வாறு விமர்சித்தவர்கள் இன்று அந்த அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலமான வசதிகளை அனுபவித்து பயணித்து வருகின்றனர். நாம் அது குறித்து பெருமையடைகின்றோம். தற்போது மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீரிகம முதல் பொதுஹெர வரையான பகுதியை வெகுவிரைவில் மக்களின் பாவனைக்காகத் திறந்துவைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். அது குறித்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார் என நினைக்கின்றோம்.

அதேபோன்று பொதுஹெர முதல் கலகெதர வரையான பகுதியின் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே ஆரம்பித்தோம்.

இன்று நமது நாடு மட்டுமின்றி முழு உலகமும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட சவால் மிகுந்த ஒரு தருணத்திலேயே ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

கொரோனாத் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கி நமது அரசு செயற்பட்டு வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதேபோன்று எவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலும் நாட்டின் அபிவிருத்தியை நாம் கைவிட்டதில்லை. கைவிடப் போவதும் இல்லை.

ஒரு சிறந்த சாலை அமைப்பு என்பது நாட்டின் அபிவிருத்தியை மதிப்பிடும் ஒரு காரணி என்றே நான் நம்புகின்றேன். மஹிந்த சிந்தனையில் போன்றே சுபீட்சத்தின் நோக்கிலும் நாம் அது குறித்து தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.

தற்போது முழு உலகமும் கொரோனாத் தொற்றுக்கு எதிராகப் போராடி வருகின்றது. கொரோனாத் தொற்று காரணமாக நமக்கு நாட்டை முடக்க முடியாது. வைரஸுக்கு எதிராகப் போராடும் அதேவேளை நாட்டு மக்களின் பொருளாதார நிலை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவார்களாயின் இந்த நிலையைக் கட்டுப்படுத்துவது அவ்வளது கடினமானதாக அமையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால் சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுமாறு நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

நாம் ஒரு நாடு என்ற ரீதியில் ஒன்றாகக் கைகோர்த்து இந்தச் சவால் மிகுந்த காலப்பகுதிக்கு முகங்கொடுப்போம். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்" - என்றார்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US