வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரின் வாக்குமூலம்! பாழடைந்த வீட்டில் சிக்கிய ஆபத்தான பொருள்
சமிட்புர சது என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ள சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய நேற்று (21) வெல்லம்பிட்டிய, சேதவத்தை பிரதேசத்தில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவு தீவிர விசாரணை
28 வயதுடைய சந்தேகநபர் இலங்கையிலிருந்து தப்பியோடி ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

இதன்பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கு முன்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ஒன்றும் 12 ரவைகளும் மட்டக்குளி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.