நாட்டின் பொருளாதாரம் உறுதி நிலையை அடைந்துள்ளது : செஹான் சேமசிங்க
நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக ஜி-24 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
வோஷிங்டனில் (Washington) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் (World Bank) வசந்த கால கூட்டத்தின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புதிய வளர்ச்சிப் பாதை
நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதனை நிவர்த்திக்க கணிசமான நிதி சீர்திருத்தங்கள், பணவியல் கொள்கையை சரிசெய்தல், நிதித்துறையை உறுதிப்படுத்தல், கடன் மறுசீரமைப்பு மற்றும் நலன்புரி சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ள நிலையில் ஏற்றுமதி, சேவைகள் உட்பட்ட கடன் அல்லாத புதிய வளர்ச்சிப் பாதைக்கு பொருளாதாரத்தை மாற்றும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
பலதரப்பட்ட சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இலங்கை தனது பலதரப்பு மற்றும் இருதரப்பு பங்காளிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் சேமசிங்க கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
