இலங்கையில் வங்கி கட்டமைப்பும் பாதிக்கப்படலாம்: மத்திய வங்கி எச்சரிக்கை
உடனடியாக எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நஷ்டமடைந்து வருவதால், அந்த நிறுவனத்தை தொடர்ந்தும் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Niwad Cabral) தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்காது போனால், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மாத்திரமல்ல, அதற்கு கடனை வழங்கும் நாட்டின் வங்கி கட்டமைப்பும் சிரமத்திற்கு உள்ளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து பொருளாதர காரணிகளையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் இந்த தருணத்தில் எடுக்க வேண்டிய பொருத்தமான நடவடிக்கை எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதே எனவும் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், அமெரிக்க டொலர்களுக்கான தட்டுப்பாடு மற்றும் உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வு என்பன காரணமாக இலங்கை பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.