கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து இலங்கைக்கு கிடைக்கும் பெருந்தொகை பணம்
எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கு 15 பில்லியன் டொலர்களை கொழும்பு துறைமுக நகரம் சேர்க்கும் என்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர வர்த்தக நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் பதவியை தாம் பொறுப்பேற்ற போது அந்த நிலம் வெற்று பாலைவனமாக காட்சியளித்ததாகவும், பதவியேற்று 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அதன் பெரும்பாலான உட்கட்டமைப்புகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நேரடி முதலீட்டுத்திட்டம்
இலங்கையின் மிகப் பெரிய நேரடி முதலீட்டுத் திட்டம் துறைமுக நகரம் என்றும் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கு 15 பில்லியன் டொலர்களை கொழும்பு துறைமுக நகரம் சேர்க்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |