நாட்டின் வறுமை 65 வீதமாக உயர்வு : விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

Parliament of Sri Lanka Sajith Premadasa Economy of Sri Lanka
By Rakesh Oct 07, 2026 03:36 AM GMT
Report

தற்போதைய அரசு பலவீனமான மற்றும் தோல்வியடைந்த பொருளாதார முகாமைத்துவத்தையே முன்னெடுத்து வருகின்றது எனவும், இதன் காரணமாக நாட்டின் 22 இலட்சம் மக்களும் எதிர்காலத்தில் பாரதூரமான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(06.10.2026) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த

மேலும் உரையாற்றுகையில், "நபர் ஒருவர் 30 நாள்கள் வாழ்வதற்கு 17 ஆயிரத்து 719 ரூபா போதுமானது எனக்கூறிக்கொண்டு, மத்திய வங்கியும் புள்ளிவிபரவியல் திணைக்களமும் வழங்கும் போலித் தரவுகளின் அடிப்படையில் அரசு செயற்படுகின்றது.

நாட்டின் வறுமை 65 வீதமாக உயர்வு : விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை | Country Poverty Rises To 65 Public Warning Issued

உலக வங்கியின் கூற்றுப்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 724 ரூபா தேவைப்படுவதால் நாட்டின் வறுமை 65.4 சதவீதமாக உள்ளது.

முந்தைய அரசின் நவ-தாராளவாதக் கொள்கையையே தற்போதைய அரசும் தொடர்கின்றது. படுகுழிக்கு இழுத்துச் செல்வது போல் வரிகளை விதித்து சமூகத்தில் அவலத்தை ஏற்படுத்தியுள்ள அரசு, மூளைசாலிகள் வெளியேற்றப்படுவதையும் ஊக்குவித்து வருகின்றது.

தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த புதிய சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்குச் செல்ல அரசு தவறிவிட்டது.

சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்துறை

மேலும், முறையற்ற கடன் முகாமைத்துவக் கொள்கைகள் காரணமாக அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு இழந்துள்ளதுடன், தேவையற்ற விதிமுறைகளால் நேரடி வெளிநாட்டு முதலீடுகளும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன.

நாட்டின் வறுமை 65 வீதமாக உயர்வு : விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை | Country Poverty Rises To 65 Public Warning Issued

அரசு வழங்கும் உதவிகள் பெரும் செல்வந்தர்களுக்கும் கறுப்புப்பட்டியலில் உள்ள முயற்சியாண்மைகளுக்கே கிடைக்கின்றனவே தவிர, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கு முறையாகக் கிடைப்பதில்லை.

ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட 2/3 சம்பளக் கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை. 37 வருட சேவையைப் பூர்த்தி செய்து ஓய்வுபெறும் நாடாளுமன்றப் படைக்கலச் சேவிதர் உபுல் சோமரத்னவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த ஞானசார தேரர் : வெளியான பரபரப்பு தகவல்கள்

தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த ஞானசார தேரர் : வெளியான பரபரப்பு தகவல்கள்

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் : உயிர் பிழைத்த விசித்திர சம்பவம்

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் : உயிர் பிழைத்த விசித்திர சம்பவம்

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US