முதலில் நாடு என்ற எண்ணத்துடன் செயற்பட வேண்டும் -கார்டினல் மெல்கம் ரஞ்சித்
“முதலில் நாடு” என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் புதிய ஆண்டில் செயல்பட வேண்டும் என கொழும்பு பேராயர், கார்டினல் மால்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
2026 ஆம் புதிய ஆண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான நெருக்கடிகளுக்கும் பேரழிவுகளுக்கும் முகங்கொடுத்துள்ள இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடுமையான பொருளாதார சுமைகளை
அனைத்து கத்தோலிக்க மக்களிடமும் மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள அனைத்து மக்களிடமும் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பகைமை, அரசியல் பிளவுகள், எதிர்மறை மனப்பாங்குகள் இவற்றை ஒதுக்கி வைத்து, நாட்டை மீள்கட்டியெழுப்பும் பணியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய ஒற்றுமையின் மூலமே, தற்போது கடுமையான பொருளாதார சுமைகளைச் சந்தித்து வரும் மக்களை மீட்டெடுக்கத் தேவையான வலிமையும் தைரியமும் நமக்குக் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின்மேல் உண்மையான அன்பும் பொறுப்புணர்வும் கொண்ட மனப்பாங்குடன், ஒற்றுமையை வளர்த்து, “முதலில் நாடு” என்ற எண்ணத்துடன் இந்த ஆண்டில் நாம் அனைவரும் செயல்படுவோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தகைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு இனிய, ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டாக இந்த புதிய ஆண்டு அமையட்டும் எனவ அவர் பிரார்த்தனை செய்வதாக கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |