மினுவன்கொட நகரசபையின் தவிசாளர் பதவி விலகல்!
மினுவன்கொட நகரசபையின் தவிசாளர் அசேல விக்ரமராச்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற சபை அமர்வுகளின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அசேல விக்ரமராச்சி தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தவிசாளராக தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி விலகல் அறிவிப்பு
ஆறு மாதங்கள் வரையில் பதவியில் நீடித்த அசேல சுய விருப்பின் அடிப்படையில் பதவியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி நிர்வாகத்திற்கு அதிகாரபூர்வ அடிப்படையில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மினுவன்கொட நகரசபை வரலாற்றில் பதவிக் காலத்தில் முதல் தடவையாக தவிசாளர் ஓருவர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் இந்த பதவி விலகல் அறிவிப்பு குறித்து தேசிய மக்கள் சக்தி இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |