புதிய சட்டங்களை கொண்டு வருவதன்மூலம் நாட்டை கட்டி எழுப்ப முடியாது: கஜேந்திரன்

Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Government
By Sudaron May 04, 2023 02:47 AM GMT
Report

இலங்கை அரசானது இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை கொண்டு வராமல் புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் (03-05-2023) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது, இந்த அரசாங்கம் ஒரு நேர்மையான நேர்வழியில் செல்வதற்குத் திருட்டுத்தனமாக தங்களுக்கு வேண்டப்படுகின்றவர்களுக்கு இந்த அரச நிறுவனங்களை விற்று அதில் இலாபம் சம்பாதிக்க முற்படுகின்றார்களா? என்ற ஒரு கேள்விதான் எழுகின்றது.

புதிய சட்டங்களை கொண்டு வருவதன்மூலம் நாட்டை கட்டி எழுப்ப முடியாது: கஜேந்திரன் | Country Cannot Be Built Gajendran

ஜனநாயக முறை

சிறிலங்கா அரசானது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர். அதனைத் தமிழர்கள் நூற்றுக்கு நூறு வீதம் எதிர்க்கின்றோம் எங்களைப் பொறுத்தவரையில், ஏற்கனவே இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாகப் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமோ அல்லது வேறு எந்த சட்டங்களோ கொண்டுவரக்கூடாது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதனை நாங்கள் முற்றாக எதிர்கின்றோம்.

தற்போது கொண்டுவரப்படவுள்ள இந்த சட்டத்தை முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் எதிர்க்கின்றார்கள். ஏனென்று சொன்னால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் ஒடுக்குகின்ற ஒரு சட்டமாகவே இது காணப்படுகிறது. ஒரு ஜனநாயக முறையிலான போராட்டத்தைக் கூடமுன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும். 

புதிய சட்டங்களை கொண்டு வருவதன்மூலம் நாட்டை கட்டி எழுப்ப முடியாது: கஜேந்திரன் | Country Cannot Be Built Gajendran

நிதியுதவிகள் 

சர்வாதிகாரப் போக்கிலேயே தொடர்ந்தும் ஊழல் மோசடிகளைச் செய்கின்ற அரசாங்கமாகவும் அதற்கு எதிராக மக்கள் சாதாரணமாக ஒரு ஜனநாயகப் போராட்டங்களைக் கூட நடத்த முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்காகத்தான் இந்த சட்டங்களைக் கொண்டு வருகின்றதா? என்ற கேள்வி தான் மக்கள் மத்திலே எழுந்து நிற்கின்றது.

இந்த நிலையிலே, இவர்கள் போனால் சர்வதேச நாடுகளில் இருந்து கிடைக்கும் ஆதரவுகள் குறிப்பாக நிதியுதவிகள் கூடப் பெற முடியாத நிலை ஏற்படக்கூடும்.

புதிய சட்டங்களை கொண்டு வருவதன்மூலம் நாட்டை கட்டி எழுப்ப முடியாது: கஜேந்திரன் | Country Cannot Be Built Gajendran

இனப்பிரச்சினைக்குத் தீர்வு

எங்களைப் பொறுத்தவரையில், இனப்பிரச்சினைக்கு ஒரு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு எட்டப்படாத வரைக்கும் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் என்ன? எத்தகைய தனியார் மயப்படுத்தல்களைக் கொண்டு செய்தால் என்ன? எத்தனை கண்துடைப்பு நடவடிக்கைகளைச் செய்தால் என்ன? இந்த நாட்டை இவர்களால் கட்டி எழுப்ப முடியாது.

ஆகவே, இவ்வாறான பித்தலாட்டங்களைக் கைவிட்டு இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை கொண்டு வருவதன் மூலமே இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியும் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டு வராமல், புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலமோ அல்லது இருக்கும் அரச நிறுவனங்களைப் பல பிரிவுகளாகக் கூறுபோட்டு தனியாருக்கு விற்பதன் மூலமோ அல்லது தனியார் மயப்படுத்துவதன் மூலமோ புதிய புதிய ஆணைக் குழுக்களை உருவாக்குவதன் மூலமோ ஒரு பொழுதும் இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US